தமிழகம்

வேலுார் அடுத்த பள்ளிகொண்டா கந்தநேரி மணல் குவாரியில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை

94views
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.  இந்த மணல் குவாரியை புதுக்கோட்டைய சேர்ந்த கரிகாவலன், ராமச்சந்திரன் ஆகியோர் நடத்தி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவியல், குவியலாக குவிக்கப்பட்டு விற்பனை செய்துவருகின்றனர்.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் சென்றது.  அதன்படி அதிகாரிகள், துணை ராணுவ படையுடன் செவ்வாய்கிழமை காலை அதிரடியாக நுழைந்து அங்குள்ள அலுவலகம், குவாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில் ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தெரிகின்றது.  இதனால் தினமும் மணல் அள்ளி சென்றடிப்பர் லாரிகள் ஆங்காங்கே காலியாக கும்பலாகவும், தனிதனியாக நின்றுகொண்டு இருந்தன.  மணல் லோடு எடுத்து செல்லாத காரணத்தால் அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது.  தமிழகத்தில் பல இடங்களில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!