தமிழகம்

வேலூர் வாலிபர் மூளைச்சாவு – 90 நிமிடத்தில் சென்னைக்கு இதயம், நுரையீரல் ஆம்புலன்சில் பறந்தது !

106views
வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில்தெருவைத் சேர்ந்தவர் பிரசாந்த் (31) கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 14-ம் தேதி பகல் பைக்கில் தனது உறவினர் மகன் சிலம்பரசன்(31) என்பவருடன் பள்ளிகொண்டாவிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தபோது கந்த நேரி கூட்ரோடு வந்தபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது.  படுகாயம் அடைந்த 2 பேரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இதில் பிரசாந்த்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனையெடுத்து அவரது மனைவி கண்ணகி, உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தார்.

பிறகு ராணிப்பேட்டை சிஎம்சி வளாகத்திற்கு பிரசாந்த் மாற்றப்பட்டார்.பின்பு இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவற்றை மருத்துவமனைதானமாக பெற்றது.  இருதயம், நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கல்லீரல் சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம்மியாட் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.  ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனை வளாகத்திலிருந்து 90 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் மூலம் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் சென்னைக்கு சென்றது.
ராணிப்பேட்டை எஸ்.பி.கிரண் சுரூதி மேற்பார்வையில் வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு அளித்தனர்.
வேலூர் வாலிபர் பிரசாந்த் தான் இறந்தும் 5 பேருக்கு வாழ்வு கொடுத்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!