தமிழகம்

சர்க்கரை நோய் அதிகயளவில் வராமல் இருக்க காய், கறி, சிறுதானிய உணவு உண்ண வேலூர் சிஎம்சி மருத்துவர் தாமஸ் அறிவுரை

164views
புகழ்பெற்ற வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை நீரிழிவு (சர்க்கரை) மற்றும் கணையவியல் துறை மருத்துவ நிபுணர் நிஹால் தாமஸ், செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:  அதிநவீன நீரிழிவு நோய் சிகிச்சைமுறைகளை பிரசித்திபெற்ற ‘லேன் செட்’ என்னும் மருத்து பத்திரிக்கை சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆராய்சிகளில் முதன்மை பொறுப்பில் வேலூர் சிஎம்சி சார்பில் நான் (டாக்டர் நிஹால் தாமஸ்) இருந்தேன்.  உலக அளவில் சர்க்கரை நோய் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் வரும் 2040 -ல் சுமார் 130 கோடிக்கு அதிகமான அளவில் பாதிக்கபடவுள்ளனர்.  கிராம பகுதிகளில் பாலீஷ் போட்ட அரிசி, துரித உணவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க காய், கறிகள், சிறுதானிய உணவுகளை பயன்படுத்த வேண்டும்.  இந்தியாவில் 40 சதவீதம் இந்த நோய் இருக்கிறது என்பதை அறியாமல் உள்ளனர்.  மகப்பேறுகாலத்தில் நீரிழிவு நோய் அதிகயளவில் ஏற்படுகிறது.நகர்புறத்தில் 25 சதவீதமும், கிராமபுறங்களில் 16 சதவீதம் அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.  மக்களுக்கு அரசு கேழ்வரகு மற்றும் சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும்,  காய், கறிகளை உணவில் அதிகயளவு சேர்த்து கொள்ள வேண்டும் மற்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சி அவசியம் என அவர் கூறினார்.  உடன் வேலூர் சிஎம்சி செய்தி தொடர்பு அதிகாரி துரை இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!