தமிழகம்

வாடிப்பட்டி பேரூராட்சி மேட்டுநீரேத்தான் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் கட்டும் பணியை புதிதாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

35views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 18வது வார்டு மேட்டு நீரேத்தான் தனிகிராமம்மாகும். இங்கு தற்போது பேரூராட்சி சார்பாக புதியதாக வடிகால் மற்றும் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது அனைத்து வடிகால்களும் தாழ்வாகவும் துhர்ந்தும், தெருவில் சேப்டிக் டேங்க் கட்டியும் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும் பல இடங்களில் நடைபாதைகள் குறுகிபோய் பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கும் இடையூறாக உள்ளது. மழைக்காலங்களில் வடிகால் வழியாக மழைநீர் செல்லாமல் தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்துவிடுகிறது.
மேலும் சாவடிக்கு பின்புறம் சுமார் 50அடிவரை இருந்த பாதை ஆக்கிரமிப்பு செய்ததால் மிகவும் சுருங்கிவிட்டது. இந்த பாதையில் தான் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின்போது அம்மன் வீதிஉலா செல்லும் ஆனால் அந்த பாதை தற்போது முழுமையாகஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை முழுவதும் அகற்றிவிட்டு புதியதாக வடிகால் கட்டும்பணியை தொடங்கவேண்டும்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!