தமிழகம்

வாடிப்பட்டியில் அ.தி.மு.க. விட்டு விலகிய கவுன்சிலர் மக்கள் குறைதீர்க்க வழிகாட் டும் மையம் தொடங்கினார்.

30views
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன் அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.அதன் பின் தற்போது அ.தி.மு.கவில் இருந்து விலகி தனது தாயார் பெயரில் மக்கள் குறைதீர்க்க வழிகாட்டும் மையத்தை துவக்கியுள்ளார். இதன் துவக்க விழா வாடிப்பட்டி கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் அசோக்குமார், சூர்யா,வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், த.மா.க.கவுன்சிலர் கீதா சரவணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.இந்த வழிகாட்டு மைய பெயர் பலகையை கவுன்சிலர் இளங்கோவின் பெற்றோர்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சோனை, முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில் ஆசிரியர் அருணா தேவி வரவேற்றார். இந்த விழாவில் சித்தர் பீட நிறுவனர் டாக்டர் விஜயபாஸ்கர்,யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, விவசாய சங்க தலைவர் சீதாரா மன், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் பொறியாளர் தமிழ் நிலவன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மதிவாணன் ஆகியோர் வாழ்த்து பேசினர்.
அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேட்டுநீரேத்தான் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அரசு பொதுத் தேர்வில் 10, 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்க பணம் ரூ.10, ஆயிரம் ரூ.7, ஆயிரம்ரூ.5 ஆயிரம் வீதம் பரிசு வழங்கப்பட்டது. இதில் கால்நடை மருத்துவர் விஜய பாஸ்கர், அரிமா சங்கத் தலைவர் சிவசங்கரன், பாலாஜி, மோகன் தாஸ், மண வலைக் கலை மன்ற பேராசிரியர் மணவாளன், முன்னாள் கவுன்சிலர் திருப்பதி, ஹோமியோபதி டாக்டர் ஜெயச்சந்திரன் உட்பட சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கவுன்சிலர் இளங் கோவன் விளக்க உரையாற்றி சமூகப் பணி செயல்பாடுகள் பற்றி விளக்கி பேசினார். வாடிப்பட்டி பகுதியில் பல்வேறு அரசு பணிக ளுக்கு நிலம் தானமாக வழங்கி யவர்களுக்கு நன்றி செலுத்து வதற்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று மரியாதை செய்யப்பட்டது.முடிவில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அருணா தேவி நன்றி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!