தமிழகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த அரசுப்பள்ளி மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

151views
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே பி.பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர்கள் முனியான்டி-பாண்டியம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு முனிஸ்வரி(18) காளிஸ்வரி(16) என்ற இரு மகள்கள் உண்டு.இதில் முனிஸ்வரி மதுரையில் தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றார்.காளிஸ்வரி பேரையூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார்.படிப்பில் கெட்டிக்காரன காளிஸ்வரி அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.பெற்றோர்கள் இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில் இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 323 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்ற கனவில் மதிப்பெண் குறைந்தால் மன விரக்தியில் தனது தோழிகளிடம் மதிப்பெண் குறைந்து விட்டதாக புலம்பியுள்ளார். இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவமறிந்த பேரையூர் போலிசார் காளிஸ்வரியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.இச்சம்பவம் பேரையூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!