தமிழகம்

உசிலம்பட்டி அருகே தனியார் மெட்ரிக்பள்ளியில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக பெற்றோர்கள் புகார்.உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பள்ளியில் திடீர் ஆய்வு.

69views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கரையாம்பட்டியில் செயல்பட்டு வரும் கெரன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி (சிபிஎஸ்சி).பள்ளியில் சுமார் 1200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியி;ல் தமிழக அரசின் இலவச கல்விக்கான 25சதவிகித இடசதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லையென்றும் பள்ளியில் மாணவ மாணவியரின் கழிப்பறை தண்ணீர் வசதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் குடிநீருக்கு ஆர்ஒ வாட்டாருக்குப் பதில் உப்புத்தண்ணீர் வழங்குவதாகவும் மேலும் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் மற்றும் எம்எல்ஏ அய்யப்பனிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இதனடிப்படையில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சம்மந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.பள்ளியிலுள்ள கழிப்பிடத்தை ஆய்வு செய்ததில் சுகாதாரமற்ற முறையிலிருப்பது தெரிய வந்தது..மேலும் ஆர்ஒ வாட்டருக்கு பதில் உப்புத்தண்ணீர் குடிநீராக வழங்கப்படுவதும் தெரிய வந்தது.மேலும் அரசின் 25இட சதவிகித இடஒதுக்கீட்டில் ஒரு குழந்தை கூட சேர்க்கப்படவில்லையென்பதும் தெரிய வந்தது.பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்ட போது தாங்கள் மைனாரிட்டி பள்ளி என்பதால் 25சதவிகித இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றும் மற்ற குறைகள் ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.அவர்களை எச்சரித்த எம்எல்ஏ அய்யப்பன் மீண்டும் புகார் வந்தால் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனக் கூறினார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!