தமிழகம்

உசிலம்பட்டி அருகே எழுமலை பேரூராட்சியில் நடைபெற்ற கவுன்சிலர் கூட்டத்தில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

92views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளதுஎழுமலை பேரூராட்சி.இங்கு மொத்தம் 18 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுக-12 அதிமுக-4 அமமுக-2 கவுன்சிலர்கள் உள்ளனர்.இதில் திமுகவலச் சேர்ந்த ஜெயராமன்   பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளார் இந்நிலையில் எழுமலை பேரூராட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றும் வார்டில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை  என கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் இன்று கவுன்சிலர் கூட்டம் எழுமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்ட நிலையில் எழுமலை பேரூராட்சி செயல்அலுவலர் நீலமேகம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.இதில் வார்டு வளர்ச்சி நிதியை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் ஒதுக்குவதாகவும் தலைவரை மாற்ற வேண்டுமெனக் கோரி தலைவர் ஜெயராமனுக்கு  எதிர்ப்பு தெரிவித்து திமுக வார்டு கவுன்சிலர்கள் உட்பட 16 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றி பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக தலைவரவை எதிர்த்து திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!