தமிழகம்

உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் பெரிய பூசாரியை தேர்ந்தெடுப்பது தொடர்பாக கோட்டாச்சியரிடம் பூசாரிகள் மனு அளித்தனர்.

205views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில்.எட்;டும் இரண்டும் பத்துதேவர் இணைந்து வழிபடும் இக்கோவிலின் பெரியபூசாரி கடந்த 2021ல் காலமானார்.தற்போது பெரியபூசாரி பதவி காலியாக உள்ளது.அடுத்தபடியாக பெரியபூசாரி பட்டம் 5வது வகையறாவான சிவத்த கருப்பன் வகையறாவுக்கு வர உள்ளது.  இதில் 5 பேர் பெரியபூசாரி பட்டத்திற்கு போட்டியிடுகின்றனர்.
இதில் செல்லப்பாண்டி என்பவர் மட்டும் மற்றவர்களை கலந்து ஆலோசிக்காமல் திமுக பிரமுகர் மற்றும் பணபல துணையுடன் தன்னிச்சையாக தன்னை பெரியபூசாரி என அழைத்துக் கொண்டாதாகவும் பத்து தேவர் வகையாறாக்களை அழைத்து இது தொடர்பாக கூட்டம் போட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் கூட்டத்தை ரத்து செய்து செல்லப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்கும்படி மற்ற 4 பூசாரிகள் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம. மனு அளித்துள்ளனர்.மேலும் 4 பூசாரிகள் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!