தமிழகம்

உசிலம்பட்டியில் இரட்சண்ய ஆலயத்தேர்தலை ரத்து செய்யக்கோரி பிரமலைக்கள்ளர் இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

126views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டிஇஎல்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளிகளும் இரட்சண்ய ஆலயம் என்ற பெயரில் கிறிஸ்துவ ஆலயமும் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப கால கட்டங்களில் உசிலம்பட்டிப் பகுதியில் பெரும்பான்மையான பொருளாதாரத்தில் பின் தங்கிய கள்ளர் சமுதாயத்தின் நலனுக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் ஆலயமும் அதன் டிரஸ்ட்டும் செயல்பட்டு வந்துள்ளன.தற்போது இதன் நிர்வாகத்திலும் இரு குழுவாக பிரிந்து இரு சமுதாயத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் வரும் 18ம் தேதி இரட்சண்ய ஆலயத்தேர்தல் நடைபெற உள்ளது. இரு சமுதாயத்தினர் இரு குழுவாக போட்டியிடுவதால் ஜாதி மோதல் ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் ஆலயத்தேர்தலை ரத்து செய்யக் கோரி பிரமலைக்கள்ளர் இளைஞர் முற்போக்கு பேரவை தலைவர் ராஜபாண்டியன் தலைமையில்,  மாநில துணைச் செயலாளர் சௌந்தர பாண்டியன்,   மாவட்ட போராட்டக் குழு தலைவர் ஜெய வீரண்ணன். ஆகியோர் முன்னிலையில்,  உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள டிஇஎல்சி இரட்சண்ய ஆலயம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தலை ரத்து செய்யக்கோரி கோஸங்கள் எழுப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் உயரணன் மதுரை மாவட்ட அணி தினேஷ் இளையராஜா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!