தமிழகம்

உசிலம்பட்டியில் பிறக்கும் முன்பே பரலோகத்திற்கு அனுப்ப தயாராக இருக்கும் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு மேற்கூரை

256views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தலைமை மருத்துவமனை தமிழகத்தில் இரண்டாவது அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக திகழ்ந்து வருகிறது இந்நிலையில் இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்காக 500க்கும் மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் இந்நிலையில் பிரசவ வார்டு முன்பு கட்டிட மேற்கூரை காங்கிரட் பூச்சு விழுந்த வண்ணம் உள்ளது மேலும் இந்த வழியாகத்தான் மருத்துவர்களும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களும் அவர்களுடைய உறவினர்களும் செல்ல வேண்டும்.

ஆனால் சமீப காலத்தில் பிரசவ வார்டின் மேற்கூரை காங்கிரட் பூச்சிகள் உதிர்ந்து கீழே விழுகின்றது, இதனால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் கைக்குழந்தையுடன் வாடிலிருந்து திரும்பும் போது அவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது பிறக்கும் குழந்தை பிறக்கும் முன் தாயும் சேயும் உயிர் பலி வாங்க காத்திருக்கும் பிரசவ வார்டு செல்லும் வழியில் கட்டிட மேற்கூரை காங்கிரட் பூச்சு பெயர்ந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மருத்துவர்கள் கண்டும் காணாமல் இருப்பது நோயாளிகளின் உறவினர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து பிறக்கும் சிசுக்கும் அதைப் பெற்ற எடுக்கும் தாய்க்கும் இந்த மருத்துவமனையில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!