தமிழகம்

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகலை தொல்லியல் ஆய்வாளர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்

33views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் ஒரு நடுகல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது சுமார் 3 அடி அகலமும், 5 அடி உயரத்திலும் வீரன் ஒருவன் குதிரையின் மீது சவாரி செய்வது போன்ற சுமார் 400 ஆண்டு பழமையான நடுகல்-யை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.

இந்த நடுகல் வலது கையில் நீண்ட வாள், இடது கையில் கயிற்றை பிடித்தவாறு உருவம் சற்று வித்தியாசமான தாடியுடன் காணப்படுகிறது எனவும்., அதன் கீழே ஒரு பெண் பண முடிப்பை கையில் வைத்திருப்பது போன்றும், ஒரு ஆண் உருவம் பாதுகாவலன் போன்றும் காணப்படுகிறது என தெரிவித்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன்.
நேர்த்தியான வடிவமைப்பில் காணப்படும் இந்த சிற்பத்தில் வீரனுக்கும், குதிரைக்கும் அதிக அளவிலான அணிகலன்கள் காணப்படுவதாகவும், இந்த பகுதியில் வாழ்ந்து பூசலில் தங்களுக்காக மாண்ட ஒரு இனக்குழு தலைவனுக்கு எழுப்பிய நடுகல்லாக இருக்கலாம் என தெரிவித்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!