தமிழகம்

உசிலம்பட்டியில் யோகா தினத்தை முன்னிட்டு 10 மாத பெண் குழந்தை தனது பாட்டி துணையுடன் யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

58views
உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனையொட்டி காவல்துறையினர் மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி மாணவர் மாணவியர் என பல்வேறு தரப்பினரும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10 மாத பெண் குழந்தை தனது பாட்டி துணையுடன் புன்னகையுடன் யோகாசனத்தில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உசிலம்பட்டி நாடார் புது தெருவை சேர்ந்தவர் கண்ணன்-ரீனா தம்பதியினருக்கு லோகிதா என்ற பத்து மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 5 மாதம் முதலே; இவருடைய பாட்டி பழனியம்மாள் தன்னுடைய பேத்திக்கு யோகா பயிற்சி அளித்து வழக்கமாக்கி வருகிறார்.
யோகா தினத்தை முன்னிட்டு 10 மாத் குழந்தை யோகா செய்வதை வாட்ஸ் அப் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குழந்தையும் சிறிதும் அழாமல் புன்னகையுடன் யோகா செய்கின்றது.தற்போது இது வைரலாகி உள்ளது. ஆரோக்கிய வாழவிற்கு வழிவகுக்கும் யோகாசனத்தை அனைவரும் பழக வேண்டுமென குழந்தை யோகா வீடியோவை பார்த்த பலரும் குழந்தையை பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!