தொலைக்காட்சி

கலைஞர் டிவியில் காலை 10 மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”

20views
கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும் பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான “வா தமிழா வா” ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார்.
சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொது மக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள் என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளை விவாதிக்க வழி வகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!