தொலைக்காட்சி

“நம்ம சென்னை”

10views
புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “நம்ம சென்னை” நிகழ்ச்சி.
தலைநகர் சென்னையை குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம். மாநிலத்தில் எட்டில் ஒருவர் சென்னைவாசி தான். இதனால், தலை நகரில் வசிக்கும் மக்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகம். அவர்களது அன்றாட பிரச்சனைகள், அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், வளர்ச்சித் திட்டங்கள் என அனைத்தையும் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியே *நம்ம சென்னை*.

அதுமட்டுமின்றி, 385 வயதான சென்னையின் வரலாற்றுச் சுவடுகளும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சாமானியரின் குரல், வளரும் சென்னை, அவசியம் – அத்தியாவசியம், மெட்ராஸின் அட்ரஸ் என தனித்தனி பகுதிகளாக பிரித்து, செய்திகளும் சிறப்புத் தொகுப்புகளும் இந்நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சென்னையின் அடையாளங்களாக கருதப்படும் இடங்களுக்கு செல்லும் தொகுப்பாளர், அங்கிருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கூடுதல் சிறப்பு.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!