72views
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “ஆலய வலம்”.
“கோவில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம்” என்பது பழமொழி.
அதற்கிணங்க நமது தெய்விகத் தமிழகம்,கோவில்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. தேவார மூவரால் பாடல் பெற்ற சிவாலயங்கள், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்ய தேசங்கள், திருப்புகழில் போற்றப்பட்டுள்ள திருக்குமரன் கோவில்கள், அருளாட்சி நடத்தும் அம்மன் ஆலயங்கள், பரிகாரத் திருத்தலங்கள், மகான்களின் அருட்தலங்கள் என ஆயிரக்கணக்கான திருக்கோவில்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.