தொலைக்காட்சி

“உங்கள் ஊர் உங்கள் குரல்”

68views
நம்ம ஊரில் என்ன நடந்திருக்கிறது எனவும், எங்க ஊரில் நடந்ததை எல்லாம் தொலைக்காட்சியில் காண முடியுமா என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் இருக்கும் பார்வையாளர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கிறது புதியதலைமுறையின் உங்கள் ஊர்…உங்கள் குரல்.
நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்ற வகையிலேயே சென்னை தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் வரை நடந்திருக்கும் நிகழ்வுகளை பதிவு செய்கிறது உங்கள் ஊர்… உங்கள் குரல். புதியதலைமுறை தொலைக்காட்சியில் மாலை 6:00 மணி முதல் 6.30 மணி வரை ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி, உங்கள் கோரிக்கைகளின் குரலாக பல்வேறு செய்திகளை பதிவு செய்கிறது.
மேலும், ஆன்மிகத் தலங்களில் நடைபெறும் முக்கிய வழிபாடுகளை உங்கள் கண்முன் கொண்டு நிறுத்துகிறது. மழை, வெயில், விவசாயம், கல்வி, சுற்றுலா என உங்கள் ஊரில் பேசுபொருளாக இருந்த பல்வேறு விஷயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. முக்கிய பிரச்னைகளை உங்கள் ஊர் மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வையும் தேடித்தருகிறது. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து காட்டுகிறது உங்கள் ஊர்… உங்கள் குரல்!

Right Click & View Source is disabled.

error: Content is protected !!