தொலைக்காட்சி

ரசிக்க ருசிக்க

67views
ஜெயா தொலைக்காட்சியில் நாள்தோறும் மாலை வேளையில் பல்வேறு தலைப்புகளில் விதவிதமான சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘ரசிக்க ருசிக்க’.
இந்நிகழ்ச்சியை பிரபல யூட்யூப் புகழ் சமையல் வல்லுனருமான திருமதி.சித்ரா முரளி தொகுத்து வழங்குகிறார். இதில் ஜெயா டிவி நேயர்கள் அனுப்பும் மாறுபட்ட சமையல் ரெசிப்பிகளில் இருந்து சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து, சமையல் செய்முறை அனுப்பிய நேயரை அரங்குக்கு அழைத்து அவர்களே சமையல் செய்துகாட்டும் விதத்தில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பலாப்பழ ஹல்வா, பீட்ரூட் பால் பாயாசம், புதினா சாம்பார் போன்ற வித்தியாசமான சமையல்கள் இடம்பெறுவதால் இல்லத்தரசிகளிடம் நல்ல வரவேற்பு இருப்பதாக சேனல் தரப்பில் கூறுகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!