தொலைக்காட்சி

புதுயுகம் தொலைக்காட்சியில் தமிழ் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள் – 14.04.2025

30views
காலை 6 மணிக்கு அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருள்மிகு ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அபிஷேக ஆராதனைகளின் சிறப்பு தொகுப்பு. “ ஆலயங்கள் அற்புதங்கள்”.
காலை 8 மணிக்கு எட்டயபுரம் சமஸ்தானத்தில் நடைபெற்ற முத்துசாமி தீட்சிதரின் 250 – வது பிறந்த நாள் தினத்தின் இசை விழா. “ இசை அமிர்தம்”.
காலை 11 மணிக்கு பட்டிமன்ற புகழ் திரு.ராஜா தலைமையில் புகழ்பெற்ற பேச்சாளர் திருமதி. பாரதிபாஸ்கர் மற்றும் பேச்சாளர்கள் பங்குபெற்ற துபாயில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம்.
மதியம் 1 மணிக்கு பிரபல ஜோதிடர்கள் பங்குபெற்று தமிழ் புத்தாண்டு பலன்களை கணித்து கூறும் “தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025”.
பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணாசிங்காரவேல் தலைமையில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றம்.
இரவு 7 மணிக்கு இசை பயணத்தின் – 25 ஆண்டுகளை நிறைவு செய்த “ ஸ்ரீகாந்த் தேவா 25”.
இரவு 8 மணிக்கு தமிழ் கலாச்சாரங்களை நாட்டிய வடிவில் எடுத்துரைக்கும் பரத நாட்டிய நிகழ்ச்சி “தமிழும் பரதமும்”.
இரவு 8.30 மணிக்கு கல்லூரி மாணவிகளின் கலகலப்பான சிறப்பு கொண்டாட்டம் “ போட்டிக்கு நாங்க ரெடி”.
இரவு 9 மணிக்கு துபாயில் முன்னணி இசை பாடகர்கள் பங்கேற்று சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்திய “பொன் மாலைப் பொழுது”.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!