தமிழகம்

தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

45views
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும், சமீபத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது நாட்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்தவும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி சந்திப்பு.
நவாஸ்கனி எம்பி வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது.,
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றனர்.
இதற்கான நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று நெடு நாட்களாக மீனவர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறனர்.
ஆனால் நிரந்தர தீர்வு காணப்படாமல் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் என வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்களையும், நான்கு நாட்டு படகுகளையும் கடந்த ஜூலை 01 அன்றும், 9 மீனவர்களையும், 2 படகுகளையும் கடந்த ஜூலை 22 அன்றும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டு படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து கைது செய்யப்பட்டு கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்து தமிழக இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க உடனடி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நவாஸ்கனி எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!