தமிழகம்

கவிஞர் பேரா விடுத்துள்ள அறிவிப்பு…

27views
நான் வருவாய்த் துறையில் பணியாற்றுகையில் மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ள என் பணிகளைத் தொகுத்து 25-அத்தியாயங்களாக கூழாங்கற்கள் என்ற நூலை எழுதி வெளியிட்டிருந்தேன் அல்லவா?
14-ஆவது அத்தியாயம் என்பது நெல்லை பேட்டைப் பகுதியில் குடியிருந்து வரும் நரிக்குறவ மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணியில் என் பணியின் சிறப்புக்களைச் சொல்லியிருக்கிறேன்.அம்மக்களுக்கு பட்டா வழங்குவதில் அன்றைக்கு அமைச்சராகப் பணியாற்றிய திரு.நயினார் நாகேந்திரன் அவர்களைப் பற்றியும்,அவர் மக்களுக்கு பணியாற்றுவதில் எவ்வளவு முனைப்பு உள்ளவர் என்பதையும் நூலின் 59.61,62 மற்றும் 63-ஆகிய பக்கங்களில் பதிவு செய்திருந்தேன்.
நூலை மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு வெளியிட,முதல் படியை நியூஸ்-18 தொலைக்காட்சியின் முதன்மை செய்தியாசிரியர் திரு.கார்த்திகைச் செல்வன் பெற்றுக்கொண்டார்.
அந்த நூலை திரு.நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.அவர்களிடம் நான் கொடுத்த போது மிகவும் மகிழ்ந்தார்.  திரு.நயினார் நாகேந்திரன் மனிதநேயப் பண்பாளர் ஆவார்.   இன்றைக்கு அரசியலில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.இது அவரது மக்கள் பணிக்கு கிடைத்திட்ட அங்கீகாரமாகும்.
-இவ்வாறு பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!