தமிழகம்

வாணியம்பாடியில் தனியார் பள்ளி செக்யூரிட்டு மர்ம நபர்களால் குத்தி கொலை

16views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இர்பான் (42), இக்பால் தெருவில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த நிலையில் இன்று திங்கள்கிழமை காலை தனது சைக்கிளில் வந்தபோது,2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்தவாணியம்பாடி காவல்துறையினர் மர்ம நபர்களை சிசிடிவி மூலம் பார்த்து விசாரணை செய்துவருகின்றனர். இறந்த இர்பானுக்கு திருமணம் ஆகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!