தமிழகம்

திருப்பரங்குன்றம் சோளங்குருணியில்ஸ்டார் கிரிக்கெட் சார்பில் மாவட்ட அளவிலான நாக்அவுட் முறையில் தலா 5 ஓவர் வீதம் கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.

42views
திருப்பரங்குன்றம் சோளங்குருணியில்ஸ்டார் கிரிக்கெட் சார்பில் மாவட்ட அளவிலான நாக்அவுட் முறையில் தலா 5 ஓவர் வீதம் கிரிக்கெட் போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது.  அதில் மதுரைமாவட்டம் மற்றும்திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு நகரம் மற்றும் கிராம பகுதியில் இருந்து 44 அணிகளின் விளையாட்டுவீரர்கள்களம் இறங்கி விளையாடினார்கள்.
அதில் கால் இறுதி, அரை இறுதி, இறுதி சுற்று பிரிவுகளில் நடைபெற்றது. இறுதிபோட்டியில் சோளங்குருணி 11 ஸ்டார் கிரிக்கெட் அணியும், மதுரை மாவட்டம் புதூர் எஸ் எஸ். சி .கிரிக்கெட் அணியும் விளையாடியது.  அதில் .எஸ்.எஸ்.சி கிரிக்கெட் அணி 3 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்து .  பின்னர் விளையாடிய 11 ஸ்டார் கிரிக்கெட் அணிக்கு 45 அடிக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது.  இந்தநிலையில் களம் இறங்கிய சோளங்குருணி 11 ஸ்டார் கிரிக்கெட் அணி 3 ஓவர் முடிவில் 22 ரன்கள் அடித்து வெற்றிவாய்ப்பு இழந்தது.
போட்டியை தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது வெற்றிபெற்ற .எஸ்.எஸ் சி புதூர் அணிக்கு முதல் பரிசாக சுழற்கோப்பையும் ரூ 15 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.  அதை வீரர்களுக்கு சோளங்குருணி ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ் வழங்கினார்.  2-வது பரிசான சுழற்கோப்பையும், ரூ 10 ஆயிரமும் சோளங்குருணி 11 ஸ்டார் அணிக்கு எலியார் பத்தி ஊராட்சித் தலைவா கண்ணன் வழங்கினார்.  3வது பரிசாக காரியாபட்டி ஸ்ட்ராங் பாய்ஸ் அணிக்கு ரூபாய் 8.ஆயிரம் சுழற்கோப்பையும் சமுக ஆர்வலர் ரவிசந்திரன் வழங்கினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!