தமிழகம்

லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா

113views
திருநெல்வேலி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகாமையில் உள்ள லெவஞ்சிபுரம் கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்ட விழாவில் கல்லூரி வளாகத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும் விஞ்ஞானியமான அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கல்லூரி குழுமத்தின் துணைத் தலைவர் முனைவர் கே.வி.ஐயப்பா கார்த்திக் மற்றும் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் இணைந்து அலுவலக மூத்த நிர்வாகி ரெனின் ஜெயா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மருத்துவர் தி. கோ.நாகேந்திரன் சமூக சேவகர் மூவர்ண தேசியக் கொடியை முனைவர் ஐயப்பா கார்த்திக் அவரிடம் அனைவரின் முன்னிலையிலும் தன் சார்பாக வழங்கி கௌரவித்தார். கல்லூரியில் பசுமை நாயகன் மரு. தி.கோ. நாகேந்திரன் கொரோனாவிற்கு எதிராக முதன் முதலாக களம் இறங்கிய முதல் தேசிய போராளி தேசியககொடியேற்றி ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் என்ற பாடல் ஒலிக்க மேலிருந்து பூ மாரி பொழிய அனைவரோடும் இணைந்து மரியாதை செலுத்தினார் பின்னர் தேசிய ஒருமைப்பாட்டை நினைவூட்டும் வகையில் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் சமூக சேவகர் பேசுகையில் பெற்ற சுதந்திரத்தை நாம் பேணி காப்பதோடு மட்டுமல்லாமல் நாம் ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தோடு அனைவருக்கும் முன்னோடியாக மாதிரியாக திகழ்வதே நம் சான்றோர்களுக்கும் தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துவதாகும் நாடெங்கிலும் சுதந்திரக் கொடி பறப்பது தீர்க்கத்தரிசியாய் கவிமணி கண்ட கனவாகும் நாம் ஒவ்வொருவரும் இயற்கையை பேணுபவராக திகழ வேண்டும் நல்ல ஒரு சமுதாயம் வர வளர ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும் என்றார் விழா தேசிய கீதத்துடன் இனிதே நிறைவுற்றது. அனைவரும் மதியம் அறுசுவை உணவு உண்டு மகிழ்ச்சியோடு நிறைவுற்றது. சுதந்திர தின விழாவிற்கான ஏற்பாடுகளை கேப் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் நியூலின் , தான்யா மற்றும் ஆசிரியர்கள் ,அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!