தமிழகம்

வெளிநாட்டவர் பாடம் நடத்தும் வெங்காடம்பட்டி பள்ளி

13views
தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். கல்வி, இரத்ததானம், சமையல், சிலம்பக்கலை, சேவைக்கான குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் என புகழ்பெற்ற கிராமம். இந்த கிராமத்தில் தான் “டிரஸ்ட் – இந்தியா” ஆங்கிலப்பள்ளி வெற்றிகரமாக 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியை நிறுவியவர் சமூக நல சேவகர் பூ. திருமாறன். பள்ளி முதல்வராக திருமதி. சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இந்த பள்ளி நிர்வாகி திருமாறன்.  பெரிய ஆரவாரம் கிடையாது. பெற்றோரை வருத்தும் கட்டணம் கிடையாது. அமைதியான பள்ளி. பாதுகாப்பிற்கு குறைவில்லை. அனுபவமி க்க பெண் ஆசிரியைகள். காற்றோட்டமான பசுமைப் பள்ளி.
உலக நாடுகளிலுள்ள பலர் டிரஸ்ட்- இந்தியா பள்ளியில் ஆசிரியர்களாக வந்து ஆங்கிலம், அறிவியல் நடத்திச் செல்வது ஊரறிந்த விஷயம். இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்காட்லாந்து, மலேசியா, ஹாலந்து போலந்து, போன்ற நாடுகளிலிருந்து இந்தப் பள்ளிக்கு பாடம் நடத்த வருவதால் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. ஆங்கிலத்தின் மீதுள்ள பயத்தைப்போக்கி சரளமாக பேச வைக்கின்றனர் இந்த வெளிநாட்டினர்.
மிகப் பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள் ஆங்கில நடிகர் என பலர் இந்த பள்ளிக்கு வந்து பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கின்றனர். செங்கல் சூளைகளில் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கும் வட இந்திய குழந்தைகளை தினமும் வாகனத்தில் அழைத்து வந்து, உணவளித்து, உடை அளித்து, கல்வி கருவிகள் தந்து பின்னர் கல்வி கற்பிப்பது இந்த பள்ளியின் தனிச்சிறப்பு. இந்த இரண்டு விஷயங்களையுமே சுற்றுவட்டார மக்கள் வியப்பாக பார்க்கின்றனர். அலங்காரம், ஆடம்பரம், ஆரவாரம் மிக்க பள்ளிகளுக்கு மத்தியில் “டிரஸ்ட் – இந்தியா” தனித்தன்மையுடன் திகழ்கிறது. ஆங்கிலேயர்களை பார்க்கவும் ஆங்கிலேயர்களிடம் பாடம் படிக்கவும், வெளிநாடுகளுக்கு போக வேண்டியது இல்லை. டிரஸ்ட் – இந்தியா பள்ளியில் சேர்த்து விட்டாலே போதும் என்கின்றனர் பொதுமக்கள்.
இந்த கல்வி ஆண்டில் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க இப்போதே பெற்றோர் ஆர்வப்படுகின்றனர் என டிரஸ்ட் இந்தியா ஆசிரியைகள் தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!