தமிழகம்

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின விழா; பள்ளி குழந்தைகளுடன் கொண்டாட்டம்:

115views
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய மருத்துவர் தின விழா மருத்துவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இணைந்து இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் வடகரை ஜாய் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் இருந்து பள்ளியின் இயக்குனர் அகஸ்டின் ஜோசப் தலைமையில் சுமார் 100 குழந்தைகள் வருகை தந்து மருத்துவர்கள் ஒவ்வொருவருக்கும் வெளி நோயாளி பிரிவில் சென்று மருத்துவர் தின வாழ்த்துக்களை கூறி பூக்களை பரிசாக வழங்கினர்.

தென்காசி தலைமை மருத்துவர் மரு. ஜெஸ்லின், பள்ளி குழந்தைகளை மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களோடு கலந்துரையாடினார். அனைத்து மருத்துவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி மருத்துவர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் குழந்தைகளை பாராட்டி, இனிப்புகள் வழங்கி ஆலோசனைகள் வழங்கினார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக 100 மரக்கன்றுகளை குழந்தைகளுடன் சேர்ந்து மருத்துவர்கள் தென்காசி மருத்துவமனை வளாகத்தில் நட்டு வைத்ததுடன் அதனை தாங்களே தொடர்ச்சியாக பராமரிப்போம் எனக் கூறியது அனைவரையும் நெகிழ்ச்சி பட செய்தது. மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கூறும் போது, இந்த வருட மருத்துவர் தினத்தை பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடியது, மருத்துவர்கள் அனைவரும் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடியது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

இந்த மருத்துவர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்த ஜாய் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அகஸ்டின் ஜோசப், நிர்வாகி சாலமோன், செயலாளர் ஜெயா சாலமோன், முதல்வர் ஜோதி, துணை முதல்வர் கார்த்திகை கணபதி மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தென்காசி மருத்துவர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் எஸ்.எஸ். ராஜேஷ், மருத்துவர் லதா, குழந்தைகள் மருத்துவர் கீதா, புனிதவதி, செல்வபாலா, விஜயகுமார், மாரிமுத்து, மது, ராம் சுந்தர், நாகஜோதி, திருமலை, அரவிந்த் ராம் மற்றும் மருத்துவ செவிலியர் கண்காணிப்பாளர்கள், மருத்துவ செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நிபுணர்கள், பணியாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!