தமிழகம்

தென்காசி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுத்தொகை; மாவட்ட ஆட்சியர் வழங்கினார்..

57views
தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள், விருது மற்றும் பரிசுத்தொகை ஆகியவற்றை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (12.06.2023) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குறைதீர்ப்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிகள் தலா ரூ.8,500/- வீதம், 1 மாற்றுத்திறனாளிக்கு மடக்கு சக்கர நாற்காலி தலா ரூ.13,500/- வீதம், 1 மாற்றுத்திறனாளி பார்வையற்றோருக்கான நவீன மடக்கு குச்சி ரூ.8,500/- வீதம், 1 மாற்றுத்திறனாளிக்கு முடநீக்கு கருவி ரூ.8,500/- வீதம் ஆக மொத்தம் ரூ.90,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் 2022-ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருது மற்றும் பரிசுத்தொகை தலா ரூ.1,00,000/- வீதம் தனி நபர் முருகேசன் என்பவருக்கும் மற்றும் அமைப்புகளுக்கான விருது பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளிக்கும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார்.

மேலும் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 274 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கர நாராயணன், மாவட்ட ஆதிதிரவிடர் நலத்துறை அலுவலர் (பொ) நடராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரா.சுதா, உதவி செயற்பொறியாளர் (மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்) ஜெபா, பாரத் மாண்டிசோரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஆ.காந்திமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!