செய்திகள்தமிழகம்

சிவகாசியில், வீட்டின் கதவை உடைத்து வெள்ளிப் பொருட்கள் திருட்டு…..

86views

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி என்.பி.எஸ்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (54). சொந்தமாக வியாபாரம் செய்து வருகிறார். செந்தில்குமார் தனது குடும்பத்தினருடன் நேற்று மதுரைக்கு சென்றிருந்தார். இரவு வீட்டுக்கு திரும்பிய அவர், தனது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர்கள், தாம்பூலத்தட்டு, சந்தனக்கிண்ணம், பூஜை பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து செந்தில்குமார், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!