தமிழகம்

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து, அமைச்சர் தங்கம்தென்னரசு, அவரது மனைவி விடுவிப்பு

139views
தமிழக தொழில்துறை அமைச்சராக இருப்பவர் தங்கம்தென்னரசு. இவர் கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், தங்கம்தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தன் மீதும், தன் மனைவி மீதும் சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி அமைச்சர் தங்கம்தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தியாளர் : வி காளமேகம். மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!