தமிழகம்

வேலூர் திருப்பதி – திருமலை தேவஸ்தான மையத்தில் தெலுங்கு வருடபிறப்பை முன்னிட்டு வெள்ளிக்கவச அலங்காரம் : பக்தர்கள் தரிசனம்

35views
வேலூர் ஆபீசர்ஸ் லைனில் உள்ள திருப்பதி – திருமலை தேவஸ்தான மையத்தில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு (புஹாதி) ஸ்ரீ ஏழுமலையானுக்கு காலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.பின்பு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு பூ அலங்காரம் செய்து காலை பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.  பகலில் வேலூர் நாயுடு சங்க தலைவர் 7G முரளிதரன் தலைமையில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனை சேர்மன் பாலாஜி அன்னதானம் வழங்கினார்.
மாலையில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு கோயில் நடை திறக்கப்பட்டது. மாலையிலிருந்து இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!