தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம்.

16views
உலக புகழ்பெற்ற ஆறு பாடவீடுகளில் முதல் வீடாக தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல்பெற்ற பாண்டியநாட்டு திருத்தலங்களில் ஒன்றான மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்ற (குடைவரைக் கோயில்) ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா முன்னிட்டு நேற்று சுப்ரமணி சுவாமிக்கு பட்டாபிஷேகமும் இன்று செவ்வாய்கிழக் சுப்ரமண்ய சுவாமி தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு அன்னை மீனாட்சி, அருள்மிகு சொக்கநாதர் பெருமாள், திருப்பரங்குன்றத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். ஏரளமான பக்தர்கள் வைபவத்தை கண்டு களித்து இருவருக்கும் மொய் பணம் செலுத்தினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!