தமிழகம்

காட்பாடிசித்தூர் பஸ்நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

21views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு பன்னீர், பால்,தயிர், தேன், பழங்கள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் அலங்காரம் செய்யப்பட்டு இன்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு திருவோண தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தபின் பிரசாத விநியோகம் நடந்தது. அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!