archiveவிஜய் சேதுபதி

சினிமா

மே 6ல் வெளியாகும் விஜய் சேதுபதியின் மாமனிதன்?

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாமனிதன் படத்தில் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் தனது ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து முதன்முறையாக இசையமைத்துள்ளனர். சில பிரச்னைகளால் நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் இப்போது வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. அதன்படி வருகிற மே 6-ம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர்...
சினிமா

ஐக்கிய அரபு நாடுகள் விஜய் சேதுபதிக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது

விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை செய்யவும் அல்லது 100 சதவீத முதலீட்டுடன் தொழில் செய்யவும் முடியும். இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இந்தியாவில் பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் வழங்கப்பட்டிருக்கும் இந்த கோல்டன் விசாவை...
சினிமா

விஜய் சேதுபதி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீசாந்த்

விஜய் சேதுபதி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது....
சினிமா

மிஷ்கின் படத்தில் நாயகனாகும் விஜய் சேதுபதி

விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த போது அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் இருந்து வெளியேறிய மிஷ்கின், அதையடுத்து ஏற்கனவே தான் இயக்கி வெற்றி பெற்ற பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார். ஆண்ட்ரியாவை பிரதானப்படுத்தி எடுத்துள்ள இந்தப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க முன்வந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மிஷ்கின் அப்படி செய்யவில்லை. பிசாசு-2 படத்தை அடுத்து தான் இயக்கும் புதிய...
சினிமா

விஜய் சேதுபதி செய்த தப்ப நீங்க செய்யாதீங்க.. எஸ்.ஜே.சூர்யாவிற்கு குவியும் அறிவுரை

தமிழ் சினிமாவில் தற்போது பிசியாக நடித்து வரக்கூடிய நடிகர் எஸ் ஜே சூர்யா. மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா வில்லனாக வைத்து படங்கள் இயக்குவதற்கு அனைத்து இயக்குனர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் எஸ் ஜே சூர்யாவிற்கு சினிமா மார்க்கெட் அதிகரித்துள்ளது. ஆனால் எஸ் ஜே சூர்யா படத்தின் கதையை கேட்டு விட்டு அதில் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் மட்டும் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்....
சினிமா

விஜய் சேதுபதி – அனுக்ரீத்தி வாஸ் நடிக்கும் புதிய படம்..!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. விஜய் சேதுபதி நடித்து மாமனிதன், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்துவாக்குல ரெண்டு காதல், முகில், விடுதலை, விக்ரம், மும்பைக்கர், பிசாசு2 போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. கடந்த மார்ச் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம்...
சினிமா

விமான நிலையத்தில் நடந்தது என்ன? – விஜய் சேதுபதி விளக்கம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூரு சென்ற விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது. அது குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபர் தனது பெயர் மகா காந்தி என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக அவருக்கு வாழ்த்து சொன்னாராம். பிறகு குரு பூஜையில்...
சினிமா

விஜய் சேதுபதி மீது தாக்குதல் ஏன்? பரபரப்பு தகவல்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது நண்பர் மற்றும் நடிகருமான மகா காந்தி என்பவருடன் விமானத்தில் பயணித்து பெங்களூரு வந்து கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் மகா காந்திக்கும்‌ அதே விமானத்தில் பயணித்த ஜான்சன் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு மகா...
சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் ‘அனெபெல் சேதுபதி’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!

பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'அனபெல் சேதுபதி'. இதில் விஜய் சேதுபதி, டாப்ஸி, யோகி பாபு, ராதிகா, மதுமிதா, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க காமெடி ஹாரர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. முதலில் இந்தப் படத்துக்கு 'அனபெல் சுப்பிரமணியம்' எனத் தலைப்பிட்டு இருந்த நிலையில், தற்போது தலைப்பை...
சினிமாசெய்திகள்

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!