சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 02
பெரும்பான்மையான வீட்டில் "எல்லாவற்றையும் அனுசரித்துப் போகவேண்டும்" என்பது பெண்களுக்கு மட்டுமேயான வலியுறுத்தல்தான்.. மானத்தைவிட எடுத்துக்காட்டுடன் விளக்கப்படும் அவமானங்களால் அச்சமுறும் தன்மை அவளுள் புகுத்தப்பட்டு எச்சரிக்கப்பட தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளித் தெரியாமல் மறைக்கவேத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறது சில பெண்ணினம்,அதில் முதன்மையென்றறியப்படுவது பாலியல் துன்புறுத்தல். வெறும் ஐம்பது நூறு வீடுகள் கொண்ட கிராமமாக இருந்தாலுங்கூட, சிறு வயது குழந்தைகளை மடிக்கு இழுத்தணைத்துக் கொஞ்சி இச்சை தீர்த்துக் கொள்ளத் துடித்த சித்தப்பன்...