“ஆடவா பாடவா” ( இரண்டாம் அரை இறுதிச்சுற்றில் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்பெஷல்)
ஆடலுக்கும் பாடலுக்கும் தனித்தனியாக பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால், ஆடலும் பாடலும் சேர்ந்த நிகழ்ச்சியாக, புதுயுகம் தொலைக்காட்சியில் “ஆடவா பாடவா” என்ற புதுமையான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பன்முக கலைஞர் மோகன் வைத்யா, பாடகர் எஸ். என் சுரேந்தர் , கர்நாடக இசைப்பாடகர் மற்றும் குரல் பயிற்றுனர் விஜயலட்சுமி மற்றும் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில்...