archiveசுற்றெங்கிலும் ஒரு பார்வை

கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 12

பரிசுத்தம் என்றுதான் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் கண்ணுக்குத் தெரியாத பறக்கும் தூசிகள் படிவதற்கான இடமும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது என்பதை மெல்லமாகத் தானே புரிகிறது. யாரோ அல்லது ஏதோ ஒன்றின் மீதான விருப்பங்கள் பளிச்சென இருக்கும் வானத்திலிருந்து காக்காவுக்கும், நரிக்குமான கல்யாணத்துக்குப்  பெய்யும் மழையாகக் கொள்ளும் உணர்வு. திடுமென வந்து உள்ளத்தை நனைத்துச் செல்லும் . வான் நோக்கி அதிசயித்து  குனிந்து ஈரமண்ணில் கால் துலாவி மீண்டும் மீண்டும் உறுதி செய்து உவகை கொள்ளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -11

உறவில்லையென்றாலும் எப்போதாவது நிகழும் சந்திப்பில் புன்னகையோடு நலம் விசாரிப்பு இருக்கும் அந்த இருவர்களுக்கும் அவ்வளவுதான். அப்படியான ஓர்நாளில் வழக்கத்திற்கு மாறாக உரையாடல் வளர்ந்து,கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் தேவலாம் போல் இருந்திருக்கக்கூடும். அவர்கள் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்துக்கு கீழே கிடக்கும் இரண்டு குத்துக்கல் தோதாக இருந்திருக்கவே.அதில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி அன்னோன்யத்தைக் கூட்டிக் காட்டியது. குடும்பம், உறவுகள் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டார்கள் இருவருமே. அடுத்தடுத்த பகிர்வுகளில்   ஒருத்தியின் கண்கள்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -10

அடர்த்தியான அன்பு நிச்சயமாக ஏதாவது பரிசு பொருட்களை பரிமாறியிருக்கும். பெற்றுக் கொண்ட அந்த நாளை டைரியில் குறித்துக் கொள்ளும் போது வரும் புன்னகைக்கு ஒரு மிதப்புணர்வு ,அதை வார்த்தைகளால் அளந்து சொல்ல முடியாததுதான். அடிக்கடி எடுத்துப் பார்த்து, தொட்டுக் கொடுத்த உணர்வுகளைத் தடவிக் கொடுத்து, அலுங்காமல் குலுங்காமல் மீண்டும் அதேயிடத்தில் வைக்கும் போது ஒட்டு மொத்த கவனமெல்லாம் ஒரு தியானமாகி ஒருங்கே குவியும் ஞானப் பொழுதது. தொலைக்க விரும்பாத மனம்,...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 09

வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். மனிதன் என்ற சொல் அல்லது உடல் அல்லது உணர்வு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். முதலில் ஆண், பெண் என்று உடலமைப்பு வேறுபடுத்திக் காட்டியதை  ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையில் தன்னை உயர்வாகக் காட்டியது ஆணினம். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்னை வெளிக்கொணர உறுதுணையாக இருந்தது முற்போக்குக் கருத்துடைய...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை : 8

நீண்ட நெடுங்காலத்திற்கு கைகோர்த்துத் திரியும் காதலோ? நட்போ?,இவர்களுக்கிடையேயான ஆழமான புரிதலென்பது   தனிப்பட்ட  விருப்பு,வெறுப்பு களில் ஒருவருக்கொருவர் தலையீடின்றி ஒதுங்கியிருத்தல் தான். வரையறுக்கப்பட்ட எல்லையில் வகுத்துக்கொண்ட  சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிப்பின்றி சம்பந்தப்பட்ட இருவரிடமும் தொடர்ந்துக் கொண்டிருக்கலாம்  . ஆனால்,சிலரின்  அன்பு தன் சுயம் தொலைத்து  அதிகாரம் என்றளவிற்கு மாறும் போது  வேண்டா வெறுப்பாகி ,ஒரு கட்டத்தில் வேண்டாமென்றே விட்டு விலக வழி தேடும். இது இயல்பானாலும் செயலாவதற்கு அத்தனை எளிதல்ல . ...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 07

அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு,  குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான். தவிர்க்கமுடியாத காரணங்களில் சுறுசுறுப்பாளர்கள் முன்சென்று வெறுமனே நிற்கும் நிலையில்,அங்கு நிலவும் கண்டுகொள்ளப்படாத் தன்மை அவனின் இருப்பை இன்னும் கொஞ்சம் இறக்கிக் காட்டும் . வலியச்சென்று தன் அடையாளத்தைக் காட்ட நிச்சயமாக ஏதோவொன்றில் அவன் சிறப்பு உறுதியாகியிருக்க வேண்டும் முன்னமே.கைவசம் எதுவும் இல்லாதவன் கைகெட்டி நிற்பதை இந்த உலகு ஒருநாளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 06

பெற்றோர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று மிதப்போடு  தனக்கென்று ஒரு குடும்பம் ஆகும் வரையிலும் கூட சில பிள்ளைகள் வீட்டுச் சுமைகளில் பங்களிப்பு செய்வதில்லை. அப்படியே பணிக்குச் சென்றாலும், ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பது போல"இந்தா, என் சாப்பாட்டுக்குக் காசு, இனி எதுவும் கேட்கக் கூடாதென்று "சட்டமாகப் பேசிவிட்டு தன் விருப்ப வாழ்விற்கு எந்தக் காரணங்கொண்டு பெற்றோர்கள் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் கவனமாக இருந்து கொள்கிறார்கள். தலா இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிரந்தர...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 04

"நான்தான் எல்லாமே,என்னால்தான் முடியும்,அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது "இப்படியான வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் பளுவினை சுமந்து திரிய சிலருக்கு ரொம்பவே பிடித்திருக்கும். இதைச் சாக்காக வைத்து "எதையும் இழுத்துப்போட்டு செய்ய ஒருவர் இருக்கும் தைரியத்தில் அலுங்காமல் குலுங்காமல் சிலர் தம் வாழ்வினை அழகாக்கிக் கொள்வர். விருப்பப்பட்டு பாரம் சுமப்பவர்கள் பிறரின் பார்வைக்கு ஏமாளி, ஆனால் சம்பந்தப்பட்டோருக்கோ "தான் தானென்று தன்னைத்தானே கொண்டாடிக்கொள்ளும் போதை.." நேர்த்தியும், ஒழுங்கும் தன்னால்தான் இயலுமென்ற மிதப்பு மனம், பிறர்...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 03

எதிரில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறுத் தன்னை மாற்றிக் கொள்ளத் தெரிந்தவர்களுக்குத்தான் எளிதாக வசப்படுகிறது வாழ்வு. "நான் இப்படித்தான் என் இஷ்டமாக இருப்பேன்,எனக்கு யாரைப்பற்றியும் கவலையில்லை" என்றிருப்பவர்களின் உறவு வட்டம் மிகக் குறுகியது,அதனால் சந்திக்கும் சிரமங்களோ மிக அதிகம். இவ்விரண்டு வெவ்வேறு குணங்களின் அடிப்படைக்கு உள்ளடங்கியவர்கள் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் இல்லையா? சிறு புன்னகையில் நட்பாதலும், முகம் திருப்பிக் கொண்ட பார்வையில் உறவு இழத்தலும்,நாம் சந்திப்பவர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் தின அனுபவங்கள். "நீயாக வந்து...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 02

பெரும்பான்மையான வீட்டில் "எல்லாவற்றையும் அனுசரித்துப் போகவேண்டும்" என்பது பெண்களுக்கு மட்டுமேயான வலியுறுத்தல்தான்.. மானத்தைவிட எடுத்துக்காட்டுடன் விளக்கப்படும் அவமானங்களால் அச்சமுறும் தன்மை அவளுள் புகுத்தப்பட்டு எச்சரிக்கப்பட தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளித் தெரியாமல் மறைக்கவேத் தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறது சில பெண்ணினம்,அதில் முதன்மையென்றறியப்படுவது பாலியல் துன்புறுத்தல். வெறும் ஐம்பது நூறு வீடுகள் கொண்ட கிராமமாக இருந்தாலுங்கூட,  சிறு வயது குழந்தைகளை மடிக்கு இழுத்தணைத்துக் கொஞ்சி இச்சை தீர்த்துக் கொள்ளத் துடித்த  சித்தப்பன்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!