ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி- 19
வளைகாப்பிற்கான வேலைகள் தடபுடலாக நடக்கிறது. சரவணனும் , செழியனும் வந்த உறவினர்களை உபசரித்துக் கொண்டிருந்தனர். தேவியின் பெற்றோரும் அவரின் உறவினரும் வரிசை பொருட்களுடன் உள்ளே நுழைகிறார்கள். அவர்கள் எடுத்துவந்த புடவையும் ,பூவையும் வைத்து தேவிக்கு அலங்காரம் செய்துகொண்டிருக்க உள்ளே வந்த கவிதா உன் அத்தைக்கு பூ கொண்டு போய் கொடு என்ற சொல்ல தேவியோ சரி சித்தி தருகிறேன். என்று லட்சுமி இருக்கும் ஒவ்வொரு இடத்திலும், "அத்தை இந்தாங்க பூ...