“நெகட்டிவ் சாயல் கொண்ட கெத்தான மாடர்ன் கதாபாத்திரங்கள் தான் எனது முதல் சாய்ஸ்” ; வசுந்தரா
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா பக்ரீத், தலைக்கூத்தல் போன்ற செலக்டிவ்வான நல்ல படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதனால் தான் இத்தனை வருட...