பதேர் பாஞ்சாலி உருவான பாடுகளின் கதை
சத்யஜித் ரேயின் சினிமா ஆசை அவர் லண்டனில் இருந்தபோதுதான் அவருக்கு ஏற்பட்டது. அங்கே அவர் பார்த்த பைசைக்கிள் தீவ்ஸ் ஆங்கிலப்படம்தான் அவருள்ளிருந்த ஒரு சினிமா படைப்பாளியை உசுப்பிவிட்டது. அந்த பைசைக்கிள் தீவ்ஸ் படம்போலவே ஒரு இயல்பான சினிமாவை உருவாக்கவேண்டும் என்று அவர் தன் மனதில் நினைத்தபோதே அவருள் தோன்றிய கதைதான் பதேர் பாஞ்சாலி. அது வங்கத்தின் பிரபல எழுத்தாளர் விபூதி பூஷண் பேனர்ஜி எழுதிய நாவல். அது நாவலாக வெளிவரும்...