archiveஇலக்கியம்

கவிதை

தாய் தமிழ் மாெழி

மொழி ஒரு மனிதனின் பிறப்புத் தொப்புள்கொடி..... மொழிகள் பல கற்றாலும் பெற்றாலும் தாய்மொழி தமிழ் தலையாய மொழி. ..... தாய்ப்பால் அருந்துவதை போன்ற ஒரு உணர்வு தமிழ்மொழியைப் படிக்கும்போது இருக்கும் ..... தமிழ் படிக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக அர்த்தங்கள் பிறக்கும்.... மொழி தன்னைப் பேச மொழி எடுத்துக்கொண்ட வடிவமே மனிதன்..... அதுவும் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான தமிழை நாம் பேசுகிறோம் என்பது பெருமை... எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ்...
இலக்கியம்

“தோழமை என்றொரு பெயர்” – நூல் விமர்சனம்

"தோழமை என்றொரு பெயர்" என்ற தோழர் ஆசுவின் கவிதை நூல் முழுவதும் படித்த பெரும் கணத்திலிருந்து' எழுதுகிறேன். எந்த இசங்களுக்கும் உட்படாமல், சொற்களை வலிந்து திணிக்காமல் அவரைப்போலவே கவிதைகளும் மிக எளிதான சொற்களில் நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உட்பொருள் தத்துவார்த்த மிக்க ஆழ்ந்த கணத்தையும் உணர்த்துகிறது. நாம் வெகுசாதாரணமாக தினமும் பார்த்து கடந்துவிடுகிற பல காட்சிகளை ஆசு நின்று நிதானித்து அதன் உள்ளார்ந்த தத்துவங்களை இயற்கை+ உயிர்கள்+மனிதன்+நேயம்+நட்பு =அன்பு. என்பதாக...
அறிவிப்பு

முதல் வரவேற்பு யாருடையது

நாளை (17-02-2022 ) வெளிவருகிறது மாணவர்களுக்கான புதுமொழிக்கதைகள்.  பேஜஸ் பப்ளிகேஷன் சிறப்பு வெளியீடு                  ப. செண்பக வடிவு எழுத்தாளரின் எளிய நடை கதைகள். உங்கள் வீட்டில் பள்ளிப் பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கும் ஏன் நீங்களும் படிக்க வேண்டிய நல்ல கதையாடல் புத்தகம் வேண்டுவோர் ராசி அழகப்பன் G Pay வில் பணம் செலுத்திவிட்டு முகவரியை அனுப்பினால் வீடு தேடி நூல்...
கவிதை

“தென்றல் சுகம்”

"தென்றல் சுகம்" என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான "ரமணி ராஜ்ஜியம்" நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! உள்ளத்தில் நிறைந்தவரிடத்து உன்னைப்போல் நானிருக்க என்னுள்ளம் ஏங்குதடி! தென்திசை தேவதையே! மென்மையான வசந்தகால வருகையே! இனிமையை எல்லோருக்கும் அள்ளித்தரும் சமதர்ம தென்றலே! அருமையான சுகத்தால் அகப்புறத்தினை ஆளும் அருமருந்தே! நறுமணம் கமழ நீ தொட்டுத் தழுவ சுமைகள் விட்டு விலகிப் போகுமடி! மனச் சுமைகள் விட்டு விலகிப்...
கவிதை

ஜன்னல் வழி…

ரமணி ராஜ்ஜியம் 06-02-2022 ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை விழிக்கு இமைகள் ஜன்னல்கள் அதன் வழியில் பார்வையின் பரவசங்கள் காதல் வழிகளை அடைத்து வைத்தாலும் காதலின் குரல்கள் ஜன்னல் வழிகளில் சாடைகள் பேசும்! என்வீட்டு ஜன்னலுக்கும் எதிர் வீட்டு ஜன்னலுக்கும் சாலைகள் குறுக்கே தடையாக இருந்தாலும் ஜன்னல் வழிகளில் சந்திப்பு நினைவுகள் பாலமாய்.......! சாதியும் மதமும் அன்பு வழிகளை ஆயுதங்களினால் அரட்டப்பட்டிருக்கிறது மனிதமனங்களில் இவைகள் எப்போது...
அறிவிப்பு

“கதை சொல்ல வா(ருங்கள்)” – கானல் குழுமம் காணொலி வழியாக கதைசொல்லும் போட்டி

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் கானல் குழுமம் ஒரு புதிய போட்டி அறிவிப்போடு உங்கள் முன்னால். இம்முறையும் கானல் நடத்தவிருப்பது காணொலிப் போட்டியைத்தான். ஆனால், போட்டியாளர்களைக் "கதை சொல்ல வா(ருங்கள்)" எனக் கானல் குழுமம் அன்புடன் அழைக்கிறது. ஆம் நண்பர்களே!! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் ரசித்துப்‌ படித்த, உங்களை அப்படியே உலுக்கிய, 'என்ன மாதிரியான எழுத்து இது?'' என உங்களை வியக்க வைத்த, ஏதேனும் சிறுகதையை எங்களுக்கும் காணொலி...
கவிதை

பயணங்கள்

வாழ்வியல் பயணத்தில் வசந்தமும் வருத்தமும் ஊழ்விணையால் வந்ததல்ல உண்மையை உணர்ந்திடுவீர் தாழ்விலா சிந்தையே தரணியில் உயர்த்துமே சூழ்நிலை யாவையுமே சுற்றமாய் சூழுமே குற்றங்கள் களைந்தே குவலயத்தில் உயர்வோம் முற்றத்தில் முடங்கிடும் முடிவல்ல வாழ்க்கை உற்றநல் பாதையில் உயர்ந்திட எண்ணியே கற்றநல் மாந்தரே களிப்புடன் பயணிப்பீர் ஆற்றிடும் பணிக்காக அயல்நாடு பயணித்தீர் போற்றிடும் தேசத்தை பொய்யென்று சொல்லாதீர் நாற்றிட்ட வயலுக்குள் நல்லுழவர் பயணமெல்லாம் வற்றிடா நீராலே வளம் பெறலாகுமே பள்ளியெனும் சோலைக்குள்...
கவிதை

இட்டார் பெரியார் – அத்தாவுல்லா

பெரியார் இட்டார் இடாதார் இழிகுலத்தார்... நம் தமிழ் சமுதாயத்திற்குத் தேவையானதை இட்டார் பெரியார் அதனால் - அவர் பெரியார்! அவர் - புரையோடிப் போயிருந்த சமூகப் புண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த ஆன்மீக வாதி! தாழ்த்தப் பட்ட மக்களைத் தலை நிமிரச் செய்ய தண்டோரா போட்ட விடுதலை முரசு.... இந்தியாவுக்குள் இருந்து கொண்டே பார்ப்பனீயத்தை எதிர்த்துப் படை எடுப்பு நடத்திய இரண்டாம் கஜனி! வாளுக்குப் பதில் வைத்திருந்தது என்னவோ கைத்தடிதான்.......
கவிதை

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ

சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா சாலையும் கூட்டமில்லா சந்தையும் தும்மலுக்கே ஓட்டம் பிடிக்கும் மனிதமும்... ஓ!!! வீரியம் கொண்ட எதிரியே உன் கிரீடத்தின் அர்த்தம் இன்றுதான் புரிந்தது.. இருந்தாலும் ஒன்றை மட்டும் மறக்காதே வருவான் ஓர் நாள் உன்னையும் வீழ்த்தும் சக்திமான்.. அதுவரை... நின்று திணறும் சுவாசமும் பீதியில் கதவடைப்பு நடத்துமே...!!! மஞ்சுளாயுகேஷ்  ...
கட்டுரை

வெள்ளிவிழாக் காணும் இனிய நந்தவனம்

தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 25 வருடமாக வெளிவந்து கொண்டிருக்கிறது இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழ் எழுத்தாளரும் கவிஞருமான நந்தவனம் சந்திரசேகரன் இனிய நந்தவனத்தின் வெளியிட்டாளரும் ஆசியருமாக இருந்து இவ்விதழை வெளியிட்டு வருகிறார். பத்திரிகைப் பயணத்தில் கால் நூற்றாண்டைக் கடக்கிறது என்பது அவ்வளவு எளிதானதன்று அதுவும் எந்தவிதமான பணமலமோ, பின்புலமோ இல்லாமல் ஒற்றை மனிதராய் இருந்து எண்ணற்ற சவால்களைச் சந்தித்து வெற்றிகரமான பத்திரிகையாளராய் வளம் வரும் நந்தவனம் சந்திரசேகரனை...
1 7 8 9 10 11 16
Page 9 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!