ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9
மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....