தமிழகம்

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

116views
அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தி அறந்தாங்கி எஸ்.எம். முஹம்மது அப்துல்லா ( வயது 35 ) அசத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் எஸ்.எம். முஹம்மது அப்துல்லா. இவர் டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது அறந் தாங்கியில் பிரைட் ஷூ மார்ட் என்ற நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.  இவரது தந்தை ஷேக் முஹம்மது. அறந்தாங்கி நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.  ஷேக் அப்துல்லா தனது 10 வயது முதல் அரபி மொழியை பல்வேறு வடிவங்களில் CALLIGRAPHY முறையில் எழுதி அசத்தி வருகிறார்.

பொதுவாக இதுபோன்ற திறமைகளை அரபி மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களே அதிகம் செய்வர். ஆனால் தமிழகத்தைச் சேர்ந் த இளைஞர் ஒருவர் முறையான பயிற்சி எதுவும் இல்லாமல் சுய ஆர்வத்துடன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த அரபி மொழி எழுத்துக்களை தட்டு உள்ளிட்ட பல்வேறு தகடுகள் மூலம் எழுதி அன்பளிப்பு பொருட்களாக வழங்கும் வகையில் வடிவமைத்து வருகிறார். மேலும் கீ செயின் உள்ளிட்டவற்றிலும் முக்கியமான திருக்குர் ஆன் சூராக்களை எழுதி அசத்தி வருகிறார்.
இந்த பொருட்களை யாராவது கேட்டால் குறைவான கட்டணத்தில் வழங்கியும் வருகிறார்.  இதுபோன்ற சிறப்பான திறமை கொண்ட இளைஞரை ஊக்கப்படுத்த வேண்டியது நமது கடமையாகும்.
தொடர்புக்கு : +91 93606 90071

Right Click & View Source is disabled.

error: Content is protected !!