தமிழகம்

திறன்மேம்பாட்டு பயிற்சி

54views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, இயற்பியல்துறை சார்பாக 24.07.2024 அன்று காலை மாணவ-மாணவியருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் மற்றும் இயற்பியல் துறைத்தலைவர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். இயற்பியல்துறை உதவிப்பேராசிரியை ஹெலன் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக தேவகோட்டை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முருகன் அவர்கள் கலந்துகொண்டு திறன்மேம்பாட்டு பயிற்சி அளித்தார். நிகழ்வில் இயற்பியல்துறை மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இரண்டாமாண்டு இளங்கலை இயற்பியல் பயிலும் மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!