தமிழகம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

44views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக கீழாயூர் கிராமத்தில் 17.02.2025 முதல் 23.02.2025 வரை ஏழு நாட்கள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை இளையான்குடி, பேரூராட்சி தலைவர் நஜ்முதீன் முகாமை துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், துணை முதல்வர் முஸ்தாக் அஹமது கான், கவுன்சிலர் சேக் அப்துல் ஹமீத், ஊர் பிரமுகர் உமர் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் “வளமிகு பாரதத்திற்கு நல மிகு இளைஞர்கள்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் டிஜிட்டல் தொழிநுட்பம் கல்வி முறை இன்றியமையாமை மற்றும் அதனை பாதுகாப்பான முறையில் கையாளுதல் என்னும் தலைப்பில், டிஜிட்டல் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுவது கிராமத்திலா அல்லது நகரத்திலா என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. டிஜிட்டல் தொழில்நுட்ப கல்விமுறை குறித்து கிராம பொதுமக்களிடம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இரண்டாம் நாள் முகாமில் தூய்மை இந்தியா (swatchh bharat) வலியுறுத்தி நடைபெற்றது. இன்றைய முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் நடுவலசை கோவில் சுற்றியுள்ள பகுதிகள், கண்மாய் மற்றும் மாணவ-மாணவிகள் தங்கும் இடம் ஆகிய பகுதிகளை தூய்மை படுத்தலில் ஈடுபட்டனர். சிறப்பு விருந்தினராக கல்லூரி உடற்கல்வி இயக்குனர் . காளிதாசன் கலந்துகொண்டு யோகா, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசி, மாணவ-மாணவியருக்கு சிறப்பு போட்டிகளை நடத்தினார். மேலும் மாணவ-மாணவியர் வயதானோர்க்கு கையெழுத்து பயிற்சி அளித்தனர்.
மூன்றாம் நாள் முகாமில் இளையான்குடி, தீயணைப்பு துறை, நிலைய மேலாளர் அருள் ராஜ் மற்றும் குழுவினர் கலந்துகொண்டு மாணவ-மாணவியருக்கு பேரிடர் கால மீட்பு, தீ விபத்து ஏற்பட்டால் மேற்க்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி குறித்து பயிற்சி வழங்கினர். பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர் கீழாயூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி, பள்ளிவாசல் மற்றும் ஊரணி பகுதிகளை சுத்தம் செய்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கல்லூரி தொழில்முனைவோர் மேம்பாட்டு கழக, ஒருங்கிணைப்பாளர் நாசர் கலந்துகொண்டு மாணவ-மாணவியருக்கு சிறு, குறு தொழில் வாய்ப்புகள் குறித்தும், அரசு வழங்கும் கடன் உதவிகள் குறித்தும் பேசினார்.
நான்காம் நாள் முகாமில் அதிகாலை மாணவர்கள் கீழாயூர் கிராமத்தை சுத்தம் செய்தனர். சிறப்புவிருத்தினராக இளையான்குடி, இணை தாசில்தார், தேர்தல் பிரிவு, சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மாணவ-மாணவியருக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்தும் பேசினார். மேலும் ஒற்றுமையே வலிமை என்னும் தலைப்பில் மாணவ-மாணவியர் இடையே கோல போட்டி நடைபெற்றது. மேலும் கீழாயூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, தலைமையாசிரியர் தலைமையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் விளையாட்டு போட்டிகள் நடத்தினர். மேலும் பள்ளியின் பின்புற பகுதிகளை சுத்தம் செய்தனர்.
ஐந்தாம் நாள் முகாமில் மாணவர்கள் கீழாயூர், அங்கன்வாடி பள்ளியை சுத்தம் செய்தனர். கீழாயூர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் தலைமையில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவியற்கு பரிசு வழங்கபட்டது. சாலைகிராமம், ஆரம்ப சுகாதார மையம், மருத்துவ அதிகாரி, தாமோதரன் உணவே மருந்து என்னும் தலைப்பில் பேசினார். மேலும் சுகாதார ஆய்வாளர் வினோத் குமார் அவர்கள் பேசினார். பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இயற்பியல் துறை, உதவிபேராசிரியை ஹெலன் கலந்துகொண்டு போதைப்பொருள் பயன்படுதலுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவ- மாணவியற்கு தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் பேச்சுபோட்டி நடைபெற்றது.
ஆறாம் நாள் முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் நெகிழி ஒழிப்பின் அவசியம் குறித்தும் தமிழக அரசின் மஞ்சப்பை பயன்படுத்தல் அறிவிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழாயூர் கிராமம் முழுவதும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் ஒரு விரல் புரட்சி என்னும் தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் இளையான்குடி, பாரத ஸ்டேட் வங்கி, மேலாளர், சிவகுருநாதன் கலந்துகொண்டு வங்கியின் பல்வேறு சேவைகள் குறித்தும், வங்கியில் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்தும் பேசினார். பின்னர் இளையான்குடி, சமூக சேவகர் மாலிக் சமூக சேவையின் அவசியம், நெகிழி ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை பயன்படுத்தலின் முக்கியத்தும் குறித்து பேசி மாணவ-மாணவியருக்கு இலவசமாக மர கன்றுகள் மற்றும் மஞ்சப்பை வழங்கினார்.
ஏழாம் நாள் நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிவகங்கை, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரி, சிராஜுதீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிறைவு விழா உரை நிகழ்த்தினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அறிக்கை சமர்ப்பித்தார். நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் முகாமில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகள் பங்கேற்ற நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக ஊர் பொதுமக்களுக்கு இலவசமாக மர கன்றுகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவியர் முகாம் நிறை மற்றும் குறைகள் குறித்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். ஏழுநாள் நடைபெற்ற முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அப்ரோஸ், சேக் அப்துல்லா, பாத்திமா கனி மற்றும் முஹம்மது பாத்திமா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!