தமிழகம்

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு அகற்றி ஒரு வழிப்பாதை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

68views
சோழவந்தானில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மார்க்கெட் ரோடு மற்றும் மாரியம்மன் சன்னதி தெரு ஆகிய ரோடுகள் ஒருவழி பாதையாக கடைப்பிடிக்க போலீஸ் அரசு போக்குவரத்து கழகம் பேரூராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  சோழவந்தான் நகரில் மாற்று வழியோ,புறவழிச் சாலையோஇல்லை ஆகையால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அன்றாடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
1987இல் மார்க்கெட்ரோடு ஒருவழி பாதையாக செயல்படுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையும் தீர்மானிக்கப்பட்டு கடைப்பிடித்து வந்தனர். காலப்போக்கில் அது நடைமுறைக்கு வரவில்லை. ஆகையால் தற்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பல இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மார்க்கெட் ரோடு வழியாக அனைத்து பஸ்களும் 65,68 உள்பட அனைத்து வாகனங்களும் பஸ் நிலையம் சென்று அந்தந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இதேபோல் அங்கிருந்து வரும் பொழுது மாரியம்மன் கோவில் சன்னதி வழியாக வெளியேற வேண்டும். பஸ் நிலையத்தில் இருந்து எந்த கனரக வாகனங்களும் மார்க்கெட் ரோடு வழியாக அனுமதிக்க வேண்டாம், இதேபோல் மாரியம்மன் கோவில் சன்னதியில் மேற்கே செல்வதற்கு எந்த கனரக வாகனம் அனுமதிக்க வேண்டாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.மற்றும் மாரியம்மன் கோவில் சன்னதி தெருவில் எந்த ஒரு ஆட்டோ ஏற்றி இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டாம். ஆட்டோ நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாடிப்பட்டி மற்றும் நகரில் இருந்து வரக்கூடிய பஸ்கள் வட்ட பிள்ளையார் கோவில் சென்று திரும்பி தபால் நிலையம் அருகே இருந்து பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பஸ் நிறுத்தங்களில் பஸ் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும். எனசோழவந்தான் மற்றும் சுற்றுப்பகுதி கிராமப் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இத்துடன் பாரபட்சமின்றி அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!