தமிழகம்

சேலம் சத்திரம் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிறுத்திய ரயில் லோகோ பைலட் : ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் விரைந்து வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதி அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

69views
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர் சேலத்தில் இருந்து எழும்பூருக்கும் எழும்பூரில் இருந்து சேலத்திற்கும் ஆத்தூர் மார்க்கமாக தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது வழக்கம்போல நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலானது சேலம் டவுன் ரயில் நிலையத்திற்கு காலை ஆறு மணி அளவில் வந்தது இதனைத் தொடர்ந்து சேலம் ஜங்ஷன் மார்கமாக புறப்பட்ட ரயிலானது டவுன் ரயில் நிலையத்திற்கும் சத்திரத்துக்கும் இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்து அதிர்ச்சி அடைந்த ரயில் லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார் ரயில் மூதாட்டியின் படுத்து இருந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் முன்பாகவே ரயில் நின்றது இதனை தொடர்ந்து ரயில்வே நிலையத்திற்கு லோகோ பைலட் தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து தண்டவாளத்தில் படுத்திருந்த ஊதாட்டியை ஆம்புலன்ஸ் உதவியாளர் காப்பாற்றினார் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்
ரயில்வே தண்டவாளத்தில் படித்திருந்த மூதாட்டி யார் எங்கிருந்து வந்தார் என்பது குறித்தும்
மூதாட்டி மயங்கிய நிலையில் தண்டவாளத்தில் படுத்தாரா அல்லது தற்கொலை செய்யும் முயற்சியில் தண்டவாளத்தில் படுத்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த மூதாட்டியை பார்த்து லோகோ பைலட் ரயிலை நிறுத்தியதால் சுமார் அரை மணி நேரம் ரயில் நின்றது இதனால் சத்திரம் பகுதி பரபரப்பு நிலவியது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!