தமிழகம்

உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் நடைப்பெற்ற மினி மாராத்தான் ஓட்டம்

135views
நவ-25 உலக அமைதிக்காக CEOA பள்ளியின் சார்பில் மினி மாராத்தான் ஓட்டம் காலை நடைபெற்றது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உலக அமைதிக்காக CEOAபள்ளியின் சார்பில் பள்ளித் தலைவர் சாமி, செயலாளர் ஜெயசந்திர பாண்டி மற்றும் காவல் துறை ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் மினி மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இப்போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர்.
இந்த ஓட்டம் மதுரை ரேஸ் கோர்ஸில் இருந்து ஆரம்பித்து தாமரைத் தொட்டி, பாண்டியன் ஹோட்டல் வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தை வந்து அடைந்தது. சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை பள்ளியின் மாணவ மாணவிகள் 400க்கும் மேற்பட்டோர் ஓடி வந்தனர். போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கிருத்திகேஷ்வர் இரண்டாம் பரிசை லித்திஷ் மூன்றாம் பரிசை அபினேஷ் சபரி மற்றும் உதயகுமார் பெற்றனர். பெண்கள் பிரிவில் முதல் பரிசை யுவஸ்ரீ இரண்டாம் பரிசை விஷ்வதர்ஷினி மூன்றாம் பரிசை அகல்யா பெற்றனர். மாரத்தான் ஓட்டத்தில் அடுத்தடுத்து வந்த 20 நபர்களுக்குச் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவர்களையும் பள்ளியின் நிர்வாகிகள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்தினர்.
செய்தியாளர் : ஜாகிர் ஹுசேன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!