தமிழகம்

வேலூர்அடுத்த காட்பாடியில் உள்ள சன்பீம் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிளையாட்டு விழா

123views
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா பள்ளி அரங்கில் நடந்தது.  பள்ளி மாணவி சஹானாவரவேற்றார். விளையாட்டு அறிக்கையை மாணவி திவ்யஸ்ரீ தொகுத்தார்.  பள்ளி தலைவர் ஹரிகோபாலன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் கே.எஸ்.ரவி, கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.  டாக்டர் தங்க பிரகாஷ், பள்ளி துணைத் தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த், முதல்வர் செளமியா மற்றும் பெற்றோர், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.மாணவி கோபிகா நன்றி கூறினார்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!