தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய சட்டம் இயற்றி, அதை நடைமுறை படுத்தாமல் இரட்டை நிலையை கடைப்பிடித்து, இளைஞர்கள் எதிர்காலத்தை மூழ்கடித்த திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம்

98views
ஆன்லைன் விளையாட்டு மிகப்பெரிய சமூகக் கொடுமை,சமூக சீரழிவு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயம் தானா என்று இன்றைக்கு, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிற இந்த ஆன்லைன் சூதாட்டத்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் இன்றைக்கு இந்த கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்.
எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத்தை தடை சட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்று வகையில், தமிழக அரசு உடனே இன்றே அதை நடைமுறைக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பாரா?
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதலை பெற்று, அது உடனே நடைமுறைக்கு கொண்டுவர இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதையும், இன்றைக்கு மக்கள் எதிர்பார்த்து கவலையோடு காத்திருக்கிறார்கள்.
ஆன்லைன் சூதாட்டம் இந்த கொடுமையை அறிந்த எடப்பாடியார் 2020ஆண்டு நவம்பர் மாதத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டத்தை பிறப்பித்தார்கள். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டமன்றத்திலே சட்டம் இயற்றினார்கள்.
2021 ஆகஸ்ட் மாதம் இதன் வழக்கு வந்தபோது, திராவிட முன்னேற்றக் கழக அரசு முறையாக வாதங்களை சமர்ப்பிக்காததால், சட்டம் அன்றைக்கு ரத்து என்கிற ஒரு தீர்ப்பை நமக்கு கிடைத்தது.
22.3.2022 ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும், அதற்கு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று எடப்பாடியார் சட்டமன்றத்திலே ஏகமனதாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தமிழகத்தில் நடப்பாண்டில் மட்டும் ரூபாய் 3,000 கோடி அளவிலே இளைய சமுதாயம் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள் என்கிற வேதனை செய்து நம்மை நெஞ்சை வேதனையை செய்கிறது. கடந்த 16.7.2022 எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.
திமுகஅரசு பொறுப்பேற்று முதல் 30 பேர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இன்றைக்கு இது குறித்து என்ன நிலைமை அதைத்தான் நாம் இன்றைக்கு விவாதிக்கின்றோம்.
திமுகஅரசு சொல்லுகிறது தடை செய்துவிட்டோம் கூறுகிறது நான் இதை அரசின் மீது குற்றச்சாட்டாக காழ்ப்புணர்ச்சியோடு நான் சொல்லவில்லை இந்த வீடியோ நீங்கள் காட்சியை நீங்கள் பார்த்தீர்களானால் இந்த வீடியோ காட்சியிலே அழைப்பு விடுகிறார்கள் என்று இந்த விவரங்கள் எல்லாம் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தொடர்ந்து இன்றைக்கு நடைமுறையில் இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இன்னைக்கு தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்வதற்காக தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது .
கடந்த மாதம் தமிழக அரசின் வெளியான அறிவிப்பில் தமிழகத்தில் கடந்து சில ஆண்டுகளாக ஆன்லைனில் விளையாட்டில் பலர் அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் பாதிப்படைந்து சிதைந்து விட்டன.
உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச நோய்களின் பகுப்பாய்வு என்ற ஆய்வில் இந்த ஆன்லைன் விளையாட்டு பழக்கம் என்பது இந்த ஆன்லைன் விளையாட்டு பழக்கம் என்பது எதிர்மறை எண்ணங்களையும், குடும்ப, சமூக ,கல்வி, தொழில் மற்றும் முக்கிய துறைகளின் செயல்பாடுகளையும் பாதிப்பதாக இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் அந்த சூதாட்டத்தை நடத்துகிற நிறுவனங்கள் நியாய ப்படுத்துகிறார்.இதை தொடர்ந்துதான் தமிழக அரசு விளையாட்டுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பித்தது.
உலகத்திலே சூதாட்டத்திற்கு கருத்து கேட்டு ஒரு அரசு திமுக அரசு அந்த கருத்து பிறகும் அது ஏன் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதுதான் இந்த வீடியோ ஒரு காட்சி நமக்கு தெளிவாகிறது அரசு
தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. அவர்கள் ஆன்லைன் விளையாட்டில் என்ன பாதிப்பு ஏற்படுகிறது எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதார வகையிலே மக்கள் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் மற்ற விளையாட்டில் இருந்து எந்த வகையில வேறுபடுகிறது ஆலோசனைகளும் அந்த நீதியரசர்கள் மக்களிடம் கேட்கப்பட்ட அடிப்படையிலே 10,735 மின்னஞ்சல்புகார்கள் வந்துள்ளன. விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று 10,708 புகார் வலியுறுத்தப்பட்டதாகவும் அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் 2 லட்சம் ஆசியரிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் ,ஆன்லைனில் 67% கண்பார்வையிலே குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது என்றும், அந்த அறிவிப்பு அவருடைய கவனம் திறமைகள் 75% குறைந்து இருக்கிறது திறமை குறைந்திருக்கிறது.
அது மட்டுமல்ல அந்த இளைய சமுதாயத்தினுடைய நடத்தையிலும் மாற்றம் ஏற்பட்டு கடும் கோபம் ஏற்படுகிறது, தன் நிலையிலிருந்து சுய கட்டுப்பாடு இழந்து கோபம் ஏற்படுகிறது . இந்த விளையாட்டை உருவாக்கியவர்கள் இதன் பாதிப்புகள் குறித்து தகவல்களை மறைத்துள்ளனர் என்றுஅந்த விசாரணையிலே தெரிவித்திருக்கிறது.
இந்த விளையாட்டில் ஈடுபடுவதற்கு முற்றிலும் நெகட்டிவ் தாட்ஸ் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும், இது விளையாட்டு திறனை பாதித்து, உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு சமூக பொருளாதாரத்தில் பின்விளைவில் ஏற்படுத்தும் இந்த விளையாட்டால் பொது, சுகாதாரம்,சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுகிறது.
அரசு தாக்கல் செய்த தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2022 கொண்டு வரப்படுகிறது இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் பெயரில் இந்த சட்ட உடனடியாக அமுலுக்குவருகிறது என்றும் ஆன்லைன் விளையாட்டை கண்காணிப்பது, வங்கிகளுக்கு தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்வதுஆகியவை அடங்கும், ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் தலைமையில், தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் அமைக்கப்படுகிறது என்றும் அரசு குறிப்பிலே அந்த செய்தி குறிப்பிலே அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள் .
அது மட்டுமில்லாமல் இந்த ஆணையத்திலே ஓய்வு பெற்ற போலீஸ் ஐஜி தகவல் தொழில்நுட்ப நிபுணர் ,உளவியலாளர், ஆன்லைன் விளையாட்டு நிபுணர்கள் ,விளையாட்டு படுத்துவதோடு உள்ளூர் ஆன்லைன் விளையாட்டுகளை நடத்துவோர்க்கு அனுமதி அளித்தல், அவர்களின் தகவல்களை திரட்டுவது ,தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது புகார்கள் வந்தால் அதற்கு தீர்வு காண்பது ஆகியவற்றையும் மேற்கொள்ளவும் பணம் வைத்து எந்த ஆன்லைனில் விளையாட்டு நடத்தக்கூடாது. ஆன்லைன் தொடர்பாக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் விளம்பரங்கள் பரிமாறி இந்த விளையாட்டுகளை ஊக்குவிக்க கூடாது இவ்வாறு தமிழர் அரசு வெளியிட்டு இருக்கிறது.
இந்த சட்டத்தினுடைய வலிமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேண்டும் இந்த அரசு விழப்புணர்வு செய்கிறதா அல்லது நாடகம் இன்றைக்கு நடத்துகிறதா இந்த அரசு சட்டத்தை இயற்றிய ஒரு புறத்தில் நாங்கள் சட்டத்தை ஏற்றுகிறோம் ஒரு புறத்தில் நீங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் என்று இந்த அரசு இன்றைக்கு இரட்டை நிலை இரட்டை நிலையை பார்க்கிற போது வேதனைதான் எஞ்சியிருக்கிறது .
ஆன்லைன் சூதாட்டத்தை உண்மையாகவே தடை செய்து ஆன்லைன் சூதாட்டத்தை உண்மையாகவே ரத்து செய்து இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து தந்திட இந்த அரசு முன்வருமா என்பதை எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை முதலமைச்சர் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!