தமிழகம்

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது

311views
மதுரை நரிமேடு பகுதியில் லேடி டோக் கல்லூரி செயல்படும் பிரதான சாலை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வங்கிக்கு வெளியே ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று இரவு வங்கிக்கிளை வழக்கம் போல பூட்டப்பட்டு ஊழியர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில், இரவு 12 மணியளவில் வங்கி ஏடிஎம்க்கு மதுபோதையில் வந்த சொக்கிக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயன்றுள்ளார்.

தொடர்ந்து வெளியே ஆள் நடமாட்டத்தை உத்திரபிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியை சேர்ந்த நித்தியானந்த் கண்காணித்துள்ளார்.

ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைக்க முயன்ற போது அலாரம் அடித்ததால் அப்பகுதியினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் விரைந்து வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஜெயக்குமார் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த நித்தியானந்த் இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பரபரப்பான சாலையில் ஏடிஎம் – ல் கொள்ளை முயற்சி நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!